டெல்லி: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா சாதனை படைத்தார். தனது 248வது ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். 50 அரைசதங்கள் மற்றும் 30 சதங்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அடித்துள்ளார்.
சர்வதேச அளவில் 10,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 15வது இடத்தை ரோஹித் பிடித்துள்ளார். சச்சின், விராட் கோலி, கங்குலி, டிராவிட், தோனி ஆகியோருக்கு அடுத்தபடியாக 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா 6வது இடத்தையும் பிடித்துள்ளார். தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் ஆசியக் கோப்பையில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.