கொழும்பு : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தது குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து கூறுகையில், அவரது ஆரம்ப காலத்தையும், டோனி அவருக்கு உதவியது குறித்தும் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், \”10,000 ரன்களை குவிப்பது என்பது அவருக்கு சாதாரணமல்ல. நிறைய ஏற்ற, இறக்கங்களை ரோஹித் பார்த்துவிட்டார். அதை அவர் அனுபவித்து இருப்பதால் இளம் வீரர்களுக்கு அவர் கேப்டனாக ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன்.
இன்று ரோஹித், ரோஹித்தாக இருப்பதற்கு டோனிதான் காரணம். அவர் துவக்கத்தில் தடுமாறிக் கொண்டு இருந்த போது டோனிதான் அவரை தொடர்ந்து ஆதரித்தார். ரோஹித் தனக்கு பின் ஒரு அடையாளத்தை ரன் குவித்தவராக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் விட்டுச் செல்ல வேண்டும் என்றால் அவர் இளம் வீரர்களை எப்படி ஆதரிக்கிறார் என்பதை பொறுத்தே அது அமையும்.\” என கம்பீர் கூறினார்.