சென்னை: அதிக விடுமுறை நாட்களில், சுற்றுலா மற்றும் புனித தலங்களுக்கு செல்ல பேருந்துகளின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆன்லைன் தளங்கள் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான சேவைகளை இயக்க பணிமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.85 கோடி பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் 1.67 கோடி பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்தனர் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.