சென்னை: அக்டோபர் மாதத்தில் தமிழக அரசு பேருந்துகளில் 1.85 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு அக்டோபரில் 1.67 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்த நிலையில் இந்தாண்டு அதிகரித்துள்ளது. விரைவில் 1666 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்ய உள்ளதால் சேவை மேம்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.