கோடை காலம் முடிந்தும் கூட சூரியனின் எனர்ஜி குறையவில்லை. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஆகஸ்ட்டிலும் கூட நம் சருமத்தைப் பதம் பார்த்துவருகிறது. கருமை, கரும்புள்ளி, அதீத வியர்வையால் சரும அலர்ஜி மற்றும் வியர்க்குரு என இப்போதும்கூட கேட்க முடிகிறது. அதற்கு தீர்வாகத்தான் வீட்டிலேயே எளிமையாகவும், பட்ஜெட்டிலும் செய்துகொள்ள இந்த ஓட்ஸ் மாஸ்க் உதவும்.
1. ஓட்ஸ் ஆலீவ் ஆயில் ஸ்க்ரப்!
தேவையானவை: ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஓட்ஸ்
கால் கப்.
செய்முறை: ஒரு டீஸ்பூன் தேனையும் ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு, தனியாக ஒரு பாத்திரத்தில் கால் பங்கு ஓட்மீலை (Oatmeal) எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை கலந்து கட்டியான பேஸ்ட் போல் இதை சமைத்து கொள்ளுங்கள். அதன்பிறகு சமைத்து வைக்கப்பட்ட ஓட்மீலோடும் தேனையும், ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக சேர்த்து கலக்குங்கள். அவ்வளவுதான். உங்கள் முகத்திற்கு பொலிவை தரக்கூடிய ஃபேஸ் மாஸ்க் ரெடி. இப்போது நீங்கள் தயார் செய்த ஸ்க்ரப்பை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறிது சிறிதாக முகத்தில் தடவுங்கள். கண்களில் பூசாதீர்கள்.சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் உங்கள் முகம் பிரகாசம் அடைவதோடு உங்களுடைய சரும ஆரோக்கியம்மேம்பட்டு பொலிவாகும்.
2. ஓட்ஸ்-தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்
தேவையானவை: தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1/2 கப், ஓட்ஸ் 1/4 கப்
செய்முறை: ஓட்ஸுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்தில் நன்கு தேய்க்க வறண்ட சரும செல்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும். மேலும் சருமமும் பளபளப்பான தோற்றம் பெற்று பளிச்சென மின்னும்.
– கவிதாபாலாஜிகணேஷ்