பச்சரிசி மாவு – 1 கப்,
நல்லெண்ணெய்,
உப்பு – சிறிது,
பாதாம்,
முந்திரி,
பிஸ்தா,
அக்ரூட் (வறுத்து உடைத்தது) – சேர்த்து அரை கப்,
ரோஜா குல்கந்து – 1 ஸ்பூன்,
வெல்லம் – ¼ கப்,
ஏலப்பொடி,
நெய் – தேவையானது,
கொழுக்கட்டை அச்சு – விருப்பமான வடிவம்.
செய்முறை:
2 கப் நீரில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு, மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறி, நன்கு வெந்து கெட்டியாக இறக்கி ஆறவிடவும். ஒரு வாணலியில் நெய் விட்டு நட்ஸ் கலவையை வறுத்து ஆறவிட்டு பொடித்து ரோஜா குல்கந்து, ஏலப்பொடி, வெல்லம் சேர்த்து கிளறி பூரணம் தயாரிக்கவும். கொழுக்கட்டை அச்சில் சிறிது எண்ணெய் (அ) நெய் தடவி வெந்த மாவை பரப்பி வைத்து நடுவில் பூரணம் வைத்து மூடி எடுத்து ஓரங்களை அழுத்தி விட்டு எடுக்கவும். அனைத்தையும் செய்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். உலர் தர்பூசணி விதை, பூசணி விதையும் இத்துடன் கலந்து செய்யலாம். மிகவும் சத்து மிகுந்தது இக்கொழுக்கட்டை. பூரணத்தை முதல் நாள் கூட தயாரித்து வைக்கலாம்.