தேவையானவை:
சத்து மாவு 1½ கப்,
மைதா அல்லது கோதுமை மாவு – 1 கப்,
பேக்கிங் பவுடர் – 2 ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்,
உப்பு -சிட்டிகை,
உடைத்த நட்ஸ் – ½ கப்,
முட்டை – 3,
வெண்ணெய் – ½ கப்,
வெல்லம் – ½ கப்.
செய்முறை:
சத்து மாவு, மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து மூன்று முறை சலிக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுத்து ஆற விடவும். ஆறியபின், முட்டையை உடைத்து கலந்து நன்கு நுரைக்க அடிக்கவும். பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின் சலித்த மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து நட்ஸ் சேர்த்து தூவி பின் பட்டர் தடவிய பட்டர் பேப்பர் போட்டு மாவை நிரப்பி டப் செய்யவும். பின் மேலே சிறிது நட்ஸ் தூவி 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கி 55 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும். சுவையான, ஆரோக்கியமான, மணமான சத்து மாவு கேக் ரெடி.