சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த தகராறு சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபானக் கூடத்தில் கடந்த 22ம் தேதி நடனம் ஆடும் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பை சேர்ந்த செல்வபாரதி என்பவர் ஏற்கெனவே கைதான நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், விருகம்பாக்கம் கணேஷ் குமார், நெற்குன்றம் தனசேகர், ஆர்கே சாலை ஜானகிராம், அஜய் வாண்டையார், ராமநாதபுரம் பிரபல ரவுடி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பாரில் நடந்த தகராறு சம்பவம்: அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது
0