ஈரான்: ஈரானின் அணுசக்தி நிலையங்களில் தங்கள் நடத்திய துல்லிய தாக்குதல்கள் மூலம் அந்நாட்டின் அணுஆயுத தயாரிப்பு சட்டத்தில் தாங்கள் பேரழிவை உருவாக்கிவிட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. மறுபுறத்தில் ரஷ்யாவின் நேரடி உதவியை ஈரான் நாடி உள்ளதால் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஈரானில் உள்ள நடான்ஸ், இஸ்பகான் மற்றும் பார்ட்டு ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது 7 வீட்டு குண்டு வீச்சு விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. நிலத்தை துளைத்து சென்று வெடிக்கும் திறன் கொண்ட மொத்தம் 30 ஆயிரம் பவுண்ட் எடை உள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆப் ரேஷன் மிட் நைட் ஹேமார் என்ற பெயரிலான தங்களின் தாக்குதல் மூலம் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு திட்டத்துக்கு பேர் அழிவு ஏற்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திலேயே இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் 86 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டடங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அமெரிக்கா மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு அதிபர் மசூத் பேசஸ்கியான் அறிவித்துள்ளார். அனைத்து விதமான சிவப்பு எல்லைகளையும் அமெரிக்கா கடந்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆளுமை எங்கள் மீதான தாக்குதலின் விளைவுகளுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் உதவியை நாட மாஸ்கோ சென்றுள்ள அவர் அங்கு இன்றுஅதிபர் புட்டினை சந்தித்து உதவி கோரா உள்ளார். பதற்றம் அதிகரிப்பதால் ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இந்திய நேரப்படி இன்று கூட்டப்பட உள்ளது. அமெரிக்காவின் நேரடி தாக்குதல் தொடராமல் இருக்க உச்சத்தலைவர் ஆயுத்துள்ளா பதவி விலக வேண்டும் என்று ஈரானிய எதிர்க்கட்சி தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் தாக்குதலால் யுரேனியம் செறிவூட்டலுக்கு பாதிப்பு இல்லை என்று கேமோரியன் ஆலோசகர் அறிவித்துள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் மசூத் எஸ்.எஸ்.கியா போர் நிலவரம் குறித்து விலகியதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.