சென்னை: பாலியல் வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மரணம் தற்கொலை தான். இதில் எந்தவித சந்தேகமும் எங்களுக்கு இல்லை என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே, ‘சாகப்போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கட்சித் தம்பிகளிடம் அதை கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். அதனால் அவர் மனம் வருத்தப்பட்டு இப்படி செய்திருக்கலாம். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான்.
குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். எங்களுக்கு இதில் எந்திவித சந்தேகமும் இல்லை. மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பொதுவாக எந்த ஒரு குற்றத்துக்கும் மரணம் தண்டனை என்பதில் உடன்பாடு இல்லை.ஆனால்,பாலியல் கொலை போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மரண தண்டனை கொடுப்பது கட்டாயம்.