புதுடெல்லி: தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) பிரிவின் இயக்குநராக 1992 பேட்ச் ஆந்திரா கேடர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி நளின் பிரபாத் இருந்தார். இவரை ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்புக் காவல்துறை இயக்குநராக ஒன்றிய அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில், என்எஸ்ஜியின் புதிய இயக்குநராக 1992 பேட்ச் பீகார் கேடர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசனை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, என்எஸ்ஜி தலைவராக சீனிவாசன் பதவியேற்க உள்ளார். இவர், பணி ஓய்வு பெறும் நாளான ஆகஸ்ட் 31, 2027 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று பணியாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.