நன்றி குங்குமம் தோழி
செளபாக்கியா நிறுவனம் இரண்டு லிட்டர் அளவு கொண்ட செளபாக்கியா ஸ்ரீ என்ற வெட்கிரைண்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் நிறுவனர்களான வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் இதன் அமைப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.‘‘இட்லி மற்றும் தோசைக்கான மாவினை வெட்கிரைண்டரில் ஆட்டுவது எளிதான வேலை என்றாலும், அதில் இருந்து மாவினை எடுப்பது, சுத்தம் செய்வது மிகப்பெரிய டாஸ்காக இருந்து வந்தது. அதை சுலபமாக்கதான் 2 லிட்டர் அளவில் டில்டிங் கிரைண்டரான ஸ்ரீயினை நாங்க அறிமுகம் செய்திருக்கிறோம்.
சிறிய அளவில் அதிக இடத்தினை ஆட்கொள்ளாமல் நான்கு பேர் உள்ள குடும்பத்தினர் எளிதில் இட்லிக்கான மாவினை அரைக்கும் வண்ணம் இதனை வடிவமைத்திருக்கிறோம். இதில் உள்ள சக்திவாய்ந்த மோட்டர் மற்றும் உருளையான அரைக்கும் கற்கள் மாவினை சீக்கிரம் அரைத்திடும். மேலும் ஸ்டெயின்லெஸ் பாத்திரம் என்பதால் துருப் பிடிக்காது, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியது, பராமரிப்பது எளிது. இதில் உள்ள டில்டிங் வசதி, அரைக்கப்பட்ட மாவினை எளிதாக பாத்திரத்தில் மாற்ற உதவுகிறது.
மாவு அரைக்க பயன்படுத்தப்படும் உருளை கற்களும் அதிக எடை இல்லை என்பதால் அதனை சுத்தம் செய்வது மற்றும் தூக்குவது சுலபம். வீட்டில் ஒரு சிறிய இடத்தில் பொருந்தக்கூடிய வகையில் இந்த வெட்கிரைண்டர் ஸ்டாண்ட் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார் வரதராஜன்.நொடியில் மாவினை அரைத்து விதவித உணவினை சுவைக்கலாம்.
தொகுப்பு: ரிதி