ஜெயங்கொண்டம், நவ.8: ஜெயங்கொண்டத்தில் நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இளவரசன் அருணாச்சலம், தியாகராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மீனா, செந்தில்வேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், பரமசிவம், கந்தசாமி, அருணன், கிருஷ்ணன், அம்பிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தா.பழூர் ராதாகிருஷ்ணன், திருமானூர் புனிதன், அரியலூர் அருண் பாண்டியன், செந்துறை அர்ஜுனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.