சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மணலியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசும்போது, காமராஜர் போன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்ந்த பதவியான ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவது சாதாரணம் அல்ல. பல தடைகளை தாண்டி சாதிக்க வேண்டும். அதிக அவமானங்களை சந்திக்க வேண்டும். நான் தூய்மையான அரசியல்வாதி. மருத்துவத்துறையில் சம்பாதித்த பணத்தைத்தான் வைத்திருக்கிறேன். என் கோட்டும் ஒயிட்டு, என் நோட்டும் ஒயிட்டு. என்னிடம் கருப்பு பணம் கிடையாது. நான் எனது அப்பாவின் அரசியலை தொடராமல் நேரடி அரசியலில் வந்தேன்’ என்றார்.