Sunday, April 14, 2024
Home » வேட்பாளர் பட்டியலில் பெயர் வரக்கூடாது என்று கோயில் கோயிலாக சுற்றும் பாஜ அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வேட்பாளர் பட்டியலில் பெயர் வரக்கூடாது என்று கோயில் கோயிலாக சுற்றும் பாஜ அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Arun Kumar


‘‘இலை பார்டியில, மினிமம் 2 எல் டூ 5 எல் வரை கொடுத்தாத்தான் போஸ்டிங் போடுறாங்களாமே.. நெஜமாவா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அதிலென்ன சந்தேகம்.. கிரிவலம் மாவட்டத்துல இலைகட்சி சென்டரல் மாவட்டத்துக்கு பெண் நிர்வாகியை நியமிச்சாங்க. இவரு வந்த பிறகு தனக்கு வேண்டியவங்களுக்கு பொறுப்பு போட்டு, அவங்க மூலமாக, நிர்வாகிகளை நியமிக்குறதுக்கு ஆறு அணி நகரத்துல மாவட்டம் இணை, ஒன்றியம், நகரம்னு பதவிக்கு ஏத்தபடி மினிமம் 2 எல் டூ 5 எல் வரைக்கும் வாங்குறாங்களாம். எல்லாம் கொடுத்த பின்னாடிதான் போஸ்டிங் போடுறாங்களாம்.

இதனால கட்சிக்காக உழைக்கும் எங்களுக்கு பதவி இல்லை. மாற்று கட்சியில இருந்து வந்தவங்களுக்கும், கரன்சி கொடுக்குறவங்களுக்கும் தான் போஸ்டிங்கா? ஜெ. இருந்திருந்தா இப்படி நடத்திருக்குமா, நாங்க.. கட்சி தொடங்குனதுல இருந்தே கட்சிக்காக உழைக்கிறோம். கொடுத்தாத்தான் பொறுப்பு கொடுப்பாங்களான்னு நிர்வாகிங்க மனவேதனையில இருக்காங்களாம். வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல இந்த வேதனை எதிரொலிக்குமாம். அதோட எம்பி வேட்பாளராக யார் நின்னாலும் அவங்களுக்கு பாதிப்பு இருக்கும்னு ரத்தங்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிர்வாகிகளை தேடி செல்ல இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்கிறதா சொல்கிறார்களே.. உண்மைதானா..’’ என அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘உண்மை தான்.. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெல்டாவில் இலை கட்சியில் உள்ள நிர்வாகிகளை இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது, தேர்தல் நெருங்கி வருவதால், இலை கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளார்களாம். இதற்காக, தனியாக டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம்.

அந்த டீம் எந்தெந்த பகுதியில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என ரகசிய பணியில் ஈடுபட்டு வருகிறதாம். பணி முடிந்த பிறகு, அந்த டீம் அளிக்கும் அறிக்கையின் படி, இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர்களை தேடி சென்று சந்திக்க முடிவு செய்துள்ளார்களாம். கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தற்போது திடீரென தங்களை சந்திக்க வருகிறார்களே என்று இலை கட்சியின் தொண்டர்கள் சுதாரித்து கொண்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேட்பாளர் பட்டியலில் பெயர் வரக்கூடாதுன்னு கோயில் கோயிலாக சுற்றுகிறாராமே பாஜ அமைச்சர்..’’ என கூறி சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் புல்லட்சாமி அறிவித்துவிட்டார். இதனால் இங்கு காங்கிரஸ், பாஜ நேரிடையாக மோதுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் தான் போட்டியிடுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட மாநில தலைவர்கள் ஒரே வாய்சாக உள்ளது. ஆனால் பாஜவில் தான் சிக்கல் நீடிக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரசுக்கு எதிராக பலமான நபரை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என புல்லட்சாமி, பாஜ மேலிட பொறுப்பாளர்களிடம் உறுதியாக கூறி
விட்டார்.

இதனால் சிட்டிங் ஒன்றிய நிதியமைச்சர் அல்லது புதுவை உள்துறை அமைச்சர் சிவாயமானவர் ஆகிய இருவரில் ஒருவர் என்பது உறுதியாகி விட்டது. நிதியமைச்சர் என்றாலும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று பாஜ தலைமை கூறிவிட்டதால் தமிழரான இவர், தமிழ்நாட்டில் போணி ஆக மாட்டோம், புதுவையில் பாஜ கூட்டணி ஆட்சி என்பதால் எளிதாக இருக்கும் என எண்ணினார். இதற்காக வீடு பார்க்கும் படலம் நடந்தது. அதற்குள் சிறுமி கொடூர கொலை சம்பவம், பாஜ கூட்டணிக்கு எதிராக பெண்கள் மனநிலையில் இருப்பதால் அவர் வேண்டாம் என தலைமையிடம் கூறி வருகிறாராம். இதுபோன்று உள்துறை அமைச்சர் சிவாயமானவரும் தனது பெயர் இடம் பெறக்கூடாது என புதுவை வில்லியனூரில் உள்ள குல தெய்வம், சேலம் அப்பா பைத்திய சுவாமி, உடுமலை அழுக்கு சாமியார் கோயிலுக்கு சென்று வந்தார். சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்ற அவர், 2ம் கட்ட லிஸ்டில் தனது பெயர் இடம் பெறக்கூடாதுன்னு சிவனிடம் வேண்டிக் கொண்டாராம். 2ம் கட்ட லிஸ்ட் வந்தால் தான் பாஜவில் பல பேர் நிம்மதி அடைவார்களாம்.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் அதிகாரிக்கு பழைய விசுவாசம் இன்னும் போகவில்லை என்கிறார்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் உள்ள முதல்படை வீடு யூனியனில் உள்ள பெண் அதிகாரி இன்னமும் அதிமுகவினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதால் மக்கள் பணிகள் பெரிதும் பாதித்துள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் புலம்புகின்றனர். இந்த பெண் அதிகாரி இங்குள்ள அதிமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக எம்எல்ஏவுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கிறாராம். இதனால் அதிமுக கவுன்சிலர்களுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே பணிகளை ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்குகிறாராம். மற்றவர்களிடம் அளவுக்கு அதிகமான கண்டிப்பு காட்டுகிறாராம். அதிகப்படியாக கமிஷன் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், பணிகளை முறையாக செய்யமுடியாது என கூறி பலரும் பின் வாங்குகிறார்களாம். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் கேட்டாலும், ‘உங்க வேலையை பாருங்க… நான் தான் இங்கு அதிகாரி, நான் சொல்வதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். எனக்கு ஆலோசனை சொல்லுவதை நிறுத்திக்கோங்க. உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என மக்கள் பிரநிதிகளையே மிரட்டுகிறாராம். இதனால் தேர்தலுக்கு முன்னர் முடிவடையக்கூடிய திட்ட பணிகள் பலவும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi