சென்னை: பாலஸ்தீன பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை. இஸ்ரேல் பகுதியில் உள்ள தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்று வரும் பாலஸ்தீனம், இஸ்ரேல் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனம், இஸ்ரேலில் சிக்கியுள்ளவர்களை மீட்க 8760248625, 9940256444, 9600023645 எண்களை தொடர்பு கொள்ளலாம். nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.