சென்னை: கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தில் கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் பணியில் இருப்பர் என்று கூறியுள்ளார்.