சென்னை: வடகலை, தென்கலை பிரச்சனையில் இருதரப்பு குருக்கள்களும் மோதலை நிறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு வெளியே தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமனறம் உறுதி செய்தது. தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
வடகலை, தென்கலை மோதலை நிறுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
0