டெல்லி: வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது. அக்.21-ல் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.23-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அக்.21-ல் மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அக்.21-ல் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவும் அக்.21-ல் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.23-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அளித்த பெட்டியில்’ “வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும், தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மிமீ மழை பெய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.