சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகமெங்கும் நடைபெற்று வரும் சாலை, மழை நீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே மேற்கொண்டுள்ள பணிகளை மட்டும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.