Thursday, September 19, 2024
Home » வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

by MuthuKumar

சென்னை: வெள்ளத் தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.. தலைமையில் இன்று (16.09.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள ஆதாரத்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர். முதன்மைச் செயலாளர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர், இயக்குநர். பேரிடர் மேலாண்மை, இணை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களின் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தலைமைப்பொறியாளர்,நெடுஞ்சாலைத்துறை, தலைமைப்பொறியாளர், நீர்வள ஆதார துறை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தலைமைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள். மண்டலம்-4ல் வடக்கு அவென்யூ சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அம்பேத்கர் நீர்வழிக்கால்வாயை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியினை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார். மண்டலம்-5ல் தமிழ்ச்சாலை, இராஜாஜி சாலை மற்றும் எழும்பூர் பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை 30.09.2023க்குள் முடிக்கவும் அறிவுறுத்தினார். மண்டலம்-6ல் பராக்கா சாலையில் தற்போது மந்த நிலையில் பணி நடைபெறுவதால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். ஸ்டீபன்சன் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணி. Sump Work and Pumping arrangements, Sluice Gate அமைக்கும் பணிகளை 30.09.2023க்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

மண்டலம்-7ல் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் Silt 30.09.2023க்குள் முடிக்க Catch Pit அமைக்கும் பணியினையும் வேண்டும் என்று அறிவுறுத்தினார். மண்டலம்-8ல் பார்த்தசாரதி சாலையில் மந்த நிலையில் பணி நடைபெறுவதால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மண்டலம்-9ல் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளை 30.09.2023க்குள்முடிக்க அறிவுறுத்தினார். மண்டலம்-10ல் அசோக் நகர் நான்காவது அவென்யூ சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புஷ்பவதி அம்மாள் நீர்வழிக்கால்வாயில் தூர்வாரி மழைநீர் விரைந்து செல்ல வழிவகை செய்யுமாறும் பணிகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார். மண்டலம்-11ல் மாதா கோவில் தெருவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மண்டலம்- 12ல் திருவள்ளுவர் நகர் ஆறுமுகம் தெருவில் மழைநீர் வடிகால் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் ஒப்பந்ததாரருக்கு தாக்கீது வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.

மண்டலம்-13ல் தலைமைச் செயலக காலணியில் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மாம்பலம் நீர்வழிக்கால்வாயில் ஒட்டியிருக்கும் அம்மா உணவகம், 16-வது நாள் காரியக்கூட கட்டடம் வேறு இடத்தில் மாற்றியும் மற்றும் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மாம்பலம் நீர்வழிக்கால்வாயினை அகலப்படுத்துமாறு அறிவுறுத்தினார். நவீன இயந்திரங்கள் கொண்டு நீர்வழிக்கால்வாயிகளில் தூரிவாரிய மண் மற்றும் கட்டடக் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் மழைநீர் விரைந்து செல்லும் வகையில் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார். வட்டார துணை ஆணையர் (தெற்கு) அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் ஈஞ்சம்பாக்கம் வரை மழைநீர் தேங்காவண்ணம் இருக்க குறுக்குச் சாலைகளில் கோவலம் வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணி B’canal-லில் வடியும் வகையில் அமைக்க தெரிவித்தார்கள்.

பெருநகர அனைத்து சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளையும் 30.09.2023க்குள் முடிக்க அறிவுறுத்தினார். கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர். பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் வரும் பருவ மழையினை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் வடபழனி மற்றும் OMR சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள ஆதார துறை அவர்கள் நீர்வள ஆதார துறையினால் பருவ மழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகளில் அனைஏரியிலிருந்து மழைநீர் வெளியேற பல்லாவரம் சுற்றுவட்டாரச்சாலை, DLF பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி அனைத்தும் 90% முடிந்துள்ளது என்றும் மீதமுள்ள பணிகள் 30.09.2023க்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

தணிகாச்சலம் நீர்வழி கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை வட்டார துணை ஆணையர் (வடக்கு), பெருநகர சென்னை மாநகராட்சி. நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், போக்குவரத்து காவல் துறை ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் பணிகளை விரைந்து முடிக்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார். மாதவரம் டேங்க் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். போரூர் உபரிநீர் செல்லும் கால்வாயினை வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதாரத்துறை. மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் ஆகியோர் கூட்டு ஆய்வு செய்து பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து மழைநீர் செல்ல Earthen drain அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், ஏழு இடங்களில் regulator அமைக்கும் பணியினையும் விரைந்து முடிக்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒக்கியம் மடு அருகில் பணி மேற்கொள்ள கொட்டப்பட்ட மணல் திட்டினை அகற்றி மழைநீர் செல்ல வழிவகை செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கூடுதல் தலைமைச் செயலாளர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அவர்கள் நெடுஞ்சாலைகள் துறையால் ஈ.வெ.ரா பெரியார் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி. Silt Catch Pit அமைக்கும் பணி 15.10.2023க்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார்கள். இரும்புலியூர் சாலையில் மழைநீர் வடிகால் பணியினை மேற்கொள்ள 150 house service connection முடிக்க, வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகியோர் கூட்டு ஆய்வு செய்து மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் 30.09.2023க்குள் சாலை வெட்டுகளை சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். அண்ணா சாலையில் விடுபட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி. Silt Catch Pit அமைக்கும் பணி 30.09.2023க்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் வடிகாலில் இருந்து தூர்வாரும் மண் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்கும்படி அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் Macro மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் மழைநீர் வடியும் இடத்தில் குப்பை செல்லாமல் இருக்கவும், கல்வெட்டிற்குள் செல்லாமல் இருக்கவும் Trash arrester அமைக்குமாறு அறிவுறுத்தினார்.

இவ்விடங்களில் CCTV camera அமைக்கும்படியும் அறிவுறுத்தினார். நீர்வழிக் கால்வாய்களில் குப்பை கொட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வரும் subwayக்களில் தூர்வாரி பம்புகளை சீரமைத்து தயார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தினார். தாம்பரம் மாநகராட்சியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இடையூராக இருக்கும் transformerகளை அகற்றித்தரவும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்குமாறும், முதன்மைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்கள் இப்பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில், ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 45 நாட்களுக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார். இறுதியாக அனைத்து துறையினரும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் pump, power saws, JCB ஆகியவைகளை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தயார் நிலையில் வைக்கவும். தேவைப்படும் இடங்களில் மரக்கிளைகளை கழிக்கவும், மழைநீர் அகற்ற பல்வேறு அளவில் குழாய்கள் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். மாநகர வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்தினை தயார் செய்யவும் அறிவுறுத்தினார்.

அபாயகரமாக உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். மேலும், குறிப்பாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு தீவிரமாக நீர்வழி கால்வாய்களில் குப்பைகள் அகற்றவும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் இதர துறைகள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார். அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 30.09.2023க்குள் முடிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் இடையூரின்றி பாதுகாப்பாக செல்ல உரிய தடுப்பரன் (barricading with green coth cover) அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi