டெல்லி: வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது. அக்.21-ல் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.23-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அக்.21-ல் மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.