சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எரிச்சலடைந்துள்ள வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனை உள்ளிட்டவைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சகை்குரிய மேற்கு கடல் எல்லை பகுதியில் வடகொரிய ராணுவம் பீரங்கி தாக்குதல்களை நடத்தின. மேலும் 3ம் முறையாக 200 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் பீரங்கி தாக்குதலை நடத்தியதை ஒப்பு கொண்ட வடகொரியா துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.