சியோல்: வடகொரியா நேற்று அதிகாலை கடலில் இருக்கும் எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வடகொரியா தனது மேற்கு கடற்பகுதியில் அடுத்தடுத்து செலுத்தி சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது அதிகாலையில் கண்டறியப்பட்டது.
ஆனால் எத்தனை ஏவுகணைகளை ஏவியது மற்றும் எவ்வளவு தூரத்திற்கு ஏவியது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றன” என்றார்.