பிரபஞ்சம் முழுவதும் இறைவன் பிடியில் இருக்கும் பொழுது நாம் ஏன்? நன்மை , தீமைகள் நடக்கின்றன. இதில், நவகிரகங்கள் ஏன் வருகின்றன என்ற சிந்தனை நமக்கு வரலாம். இறைவனை வழிபடுவதால் நமக்கு நன்மைகள் மட்டுமே உண்டு. தீமைகள் இல்லை. ஆனால், ஒருவர் செய்கின்ற பாவப்புண்ணியங்கள் என்பது அவனுடன் பயணிக்கின்றன. ஒருவருடைய பிராப்தம் என்னவோ? அதுவே அவர்கள் அனுபவிக்கும் அனுபவமாகும். ஆனாலும், இறைவனின் பிராப்தம் இருந்தால் தீமைகளிலிருந்து விடுபடும் பாக்கியம் உண்டு. வேலூரில் உள்ள பள்ளிக் கொண்ட நாதரின் சிறப்புகளை அறிவோம்.
வேலூர் மாவட்டத்தில்பள்ளி கொண்டாவில் அமைந்துள்ளது. உத்திர பள்ளிகொண்ட ரெங்கநாதர் ஸ்தலமாகும். இத்தலத்தின் சிறப்பு என்னவெனில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீங்கியது இத்திருத்தலத்தில்தான். இங்குள்ள ரெங்கநாதரை பிரம்மன் தரிசித்து யாகம் செய்ய விரும்பினார். 100 யாகங்கள் செய்வதைவிட சத்ய விரத சேஷத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் செய்வது என முடிவெடுத்தார்.
இந்நிலையில் லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் யார் பெரியவர் என்ற போட்டி நிலவவே. இதனை பிரம்மனிடம் கேட்டனர். பிரம்மா லஷ்மியோ உயர்ந்தவள் எனக் கூறி விடவே. சரஸ்வதி கோபமடைந்து மேற்கே உள்ள நந்தி துர்கா மலைக்குச் சென்றாள். காஞ்சியில் பிரம்மா செய்யவிருக்கும் யாகத்திற்கு தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார். ஆனால், உடன் வரவில்லை. எனவே, சாவித்திரி என்ற பெண்ணை படைத்து அவளை மனம் புரிந்து யாகத்தை தொடங்கினார்.
இந்த விவரம் அறிந்த சரஸ்வதி நதியாக பெருக்கெடுத்து யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதை அறிந்த பிரம்மா மன் நாரயணனை தஞ்சம் புகுந்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பள்ளி கொண்டா, திருப்பாற்கடல், காஞ்சிபுரம் என மூன்று இடங்களிலும் வெள்ளத்தை தடுத்தார். இதன் மூலம் பிரம்மாவின் யாகத்தை ஸ்ரீமன் நாரயணன் காத்தருளினார். இதுவே தல புராணம்.
உத்திர ரெங்கநாதர் ஆண்டாளை திருமணம் செய்தது போலவே சம்பாதி முனிவரின் விருப்பப்படி பங்குனி உத்திரத்தன்று திருமால் செண்பகவல்லி என்ற பக்தையை திருமணம் செய்தார். இங்கு சயனக் கோலத்தில் இருக்கிறார்.
சூரியன், சுக்ரன், வியாழன் கிரகங்கள் உத்திர ரெங்கநாதருக்கு நாமகரணம் செய்துள்ளது.
இந்திரன் இந்திராணியுடன் வனத்தில் உலாவும் பொழுது குருவின் வடிவான ரிஷிகள் கிளி ரூபத்தில் இருந்தனர். அவர்களை இந்திரன் கொன்றதால் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. இத்தோஷம் நீங்க காச்சயப்ப முனிவரின் அறிவுரைப்படி பள்ளிகொண்டா சென்று வியாச புஷ்கரணியில் நீராடி ஒராண்டு காலம் உத்திர ரெங்கநாதரை தரிசனம் செய்து பிரம்ம ஹத்தி தோஷம் விலகப் பெற்றார்.
பிரம்ம ஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் விலகும். வியாழன் – சனி தோஷத்தை இந்தக்குளம் விலக்குகிறது என்று பொருளாகிறது. அதுபோலவே, குரு-சுக்ர மூடம் என்பது குருவும் சுக்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது மற்றும் குருவும் சுக்ரனும் இணைந்திருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதால் நற்பலன்கள் கிட்டும். நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தன்று செந்தாமரை மலர் கொண்டு செண்பகவல்லி தாயாருக்கு வழிபட்டால் திருமணப் பிராப்தம் உண்டாகும்.
கணவன் – மனைவி பிரச்னை உள்ளவர்களும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வந்து குளத்தில் நீராடி எள்ளுருண்டை நெய்வேத்தியமாக சுவாமிக்கு கொடுத்து பின்பு, பக்தர்களுக்கு தானமாக வழங்கினால் பிரச்னைகளுக்கு தீர்வு உண்டாகும்.
நீதிமன்ற வழக்கு உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து பச்சை பழங்களை வைத்து வழிபட்டு வீட்டிற்கு எடுத்து வந்தால் நீதிமன்ற வழக்குகள் தீர்வாகி முடிவுக்கு வரும்.