சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை, நீர்வளம், வருவாய்த்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.