சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். பருவமழைக்கு முன்னதாக மாதவரம் ரெட்டேரியில் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வலியுறுத்தியுள்ளார்.