சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது;
முதலமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தில் 218 பணியில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றோம். குறிப்பாக கொளத்தூரில் இருக்கின்ற வண்ண மீன்கள் விற்பனை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு என்று சுமார் 54 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் 138 கடைகள் கட்டுமான பணியை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வினை மேற்கொண்டோம். அதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயனாவரம், யுனைடெட் காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தை பார்வையிட்டு அந்த நூலகத்தினை மேம்படுத்துவதற்குண்டான ஆய்வினை மேற்கொண்டோம். அதைத் தொடர்ந்து வடசென்னையில் சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கின்ற மக்களுக்காகவும், அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக இந்த இடத்தில் கூட்டுறவு பண்டகசாலை என்ற பெயரில் இருக்கின்ற இந்த இடத்தில் சுமார் 776 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
அதைப்போல் வால்டாக்ஸ் ரோடு, வாட்டர் பேஷன் சாலை என்று சொல்லப்படுகின்ற தண்ணீர் தொட்டி தெருவில் 700 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை என்று ஒட்டுமொத்தமாக 1.476 குடியிருப்புகளை கட்டமைக்கின்ற பணிகளை இந்த மாத இறுதியில் முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்த கட்டுமான பணி என்பது திட்டமிடப்பட்டு அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் மாதத்திற்குள் மக்களிடம் ஒப்படைவதற்குண்டான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தைப் பொறுத்தளவில் முதல்வர் அவர்களின் சிந்தனையில் தோன்றிய திட்டம் என்பதால் தொடர்ந்து இந்த திட்டத்தினுடைய ஆய்வுப்பணிகளை துணை முதலமைச்சர் அவர்களிடம் இந்தத் திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை போன்ற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த உத்தரவிட்டதோடு முதலமைச்சர் அவர்கள் இந்த பணிகளை தொடர்ந்து கவனித்து வருகின்றார்.
இந்த திட்டத்தினுடைய நோக்கம் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்ற மக்களுக்காகவும், கல்வி கற்பதற்கு வெகு தூரம் செல்கின்ற சூழ்நிலை உள்ளவர்கள், சுயமாக பணி செய்வோருக்கு உண்டான தகுந்த சூழ்நிலைக்கு ஏற்ப கட்டமைப்புகள் போன்றவற்றை உருவாக்குவது, இந்த திட்டத்தினுடைய நோக்கமாக இருக்கின்றது. அந்த வகையில் நூலகங்களை புதுப்பிப்பதும், முதல்வர் படிப்பகம் என்ற பெயரிலே கோவர்கிங் ஸ்டேஷன், படிப்பதற்கென்று ஒரு தளத்தையும், பணி செய்வதற்கென்று ஒரு தளத்தையும் உருவாக்குகின்றோம். இந்த முயற்சியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு இருக்கின்றது.
அந்த வகையில் வடசென்னை பகுதிக்குட்பட்ட துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், திருவிக நகர், ராயபுரம், ஆர் கே நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் 12 நூலகங்களை தரம் உயர்த்தவும், அவர்கள் படிப்பதற்குண்டான இன்டர்நெட் வசதியுடன் அரங்குகள் அமைப்பதும், அதேபோல் கோவர்கிங் ஸ்டேஷன்ஸ்-ல் கூட்டரங்கம் (Conference Hall) அமைப்பதும், அவர்கள் பணி செய்வதற்குண்டான அனைத்து வசதிகள் ஏற்படுத்தி தருவதையும் நோக்கமாகக் கொண்டு அந்த பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.
வடசென்னை பகுதிக்கு வளர்ச்சி என்பது கடந்த பத்தாண்டு கால ஆட்சி சற்று நலிவுற்று இருந்ததை முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, வடசென்னையை வாடா சென்னையாக ஆக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். அதற்கு பேருதவியாக எங்கள் துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா அவர்களும் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அன்பிற்கினிய மணிவாசன் அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியினுடைய ஆணையாளர் குமரகுருபரன் அவர்களும், சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா அவர்களும் மற்றும் மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர் அவர்கள் போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் பெருமளவு ஒத்துழைப்பாக இருக்கின்றார்கள்.
முதல்வருடைய கனவை நிச்சயமாக நினைவாக்குவோம். வடசென்னை மக்களுடைய அடிப்படை தேவைகளை முழு முயற்சியோடு நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். தினந்தோறும் இது போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து அந்த பணிகளுடைய முன்னேற்றங்கள் குறித்தும், அந்தப் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
அதே போல் பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்று சாலைகளை விரிவாக்குகின்ற திட்டங்களை கையில் எடுத்து இருக்கின்றோம். அது குறித்த ஆய்வு கூட வருகின்ற 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட இருக்கின்றது. துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தொடர்ந்து நெருக்கடியான இந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்துவதற்கும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், பாதசாரிகளுக்குண்டான வழி வகைகளை செய்கின்ற ஒரு அரசாக இருக்கின்றது.
இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு தான் சென்னை, பிராட்வே பேருந்து நிலையம் 74 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையம் அதில் ரூ.824 கோடி செலவில் ஒரு பெரும் திட்டத்தை தயாரித்து மல்டி லெவல் கார் பார்க்கிங் உட்பட வணிக வளாகங்கள் உட்பட பழைய கட்டடமான குரளகம் உட்பட அனைத்தையும் 9 மாடியில் கொண்ட கட்டிடமாகவும், அதேபோல் தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் பேருந்து நிலையத்திற்கும், மீதம் இருக்கின்ற 6 தளங்கள் வணிக வளாகத்திற்கும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இதேபோல் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் இந்த வடசென்னை வளர்ச்சி திட்ட தேவை அதிக முக்கியத்துவம் தந்திருக்கின்றார் நம் முதல்வர் அவர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவு நீர் சீராக செல்வதற்குண்டான பாதைகள் போன்றவைகளும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் அவர்கள், நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப., அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், மீன்வளத் துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் திரு.ப.கணேசன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் (மத்திய) கே.ஜே.பிரவின் குமார், இ.ஆ.ப., அவர்கள், (வடக்கு) கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் பா.ரங்கநாதன் அவர்கள், மண்டலக் குழுத்தலைவர்கள் கூ.பீ.ஜெயின், ஸ்ரீராமலு, சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, மாநகராட்சி மண்டல அலுவலர்கள் சுரேஷ், பரிதா பானு, கண்காணிப்புப் பொறியாளர் ராஜமகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சுதா தீனதயாளன், தனலஷ்மி சரவணன், தாஹா நவின், ராஜேஷ் ஜெயின், உள்ளாட்சி பிரதிநிதிகள் வே.வாசு, வானவில் விஜய், சாவித்ரி வீரராகவன், முரளி, ராஜசேகர், ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.