சென்னை: வங்கிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பதால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடியும், கோட்டக் மகிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடியும் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட மூன்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் அபராதம் விதித்தது. கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments Bank Limited மீது KYC விதிகள் உட்பட சில விதிகளுக்கு இணங்காததற்காக 5.39 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்தநிலையில் தற்போது விதிமுறைகளை பின்பற்றவில்லை என குற்றம் சாட்டி, ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடியும், கோட்டக் மகிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடியும் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.