சென்னை: தமிழ்நாட்டில் நூடுல்ஸ் விற்பனை, தயாரிப்பு கிடங்குகள் மற்றும் இதர இடங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் மற்றும் ஆகியவை இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று முன்தினம் ஆன்லைனில் ஆர்டர் செய்து சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.