சென்னை: சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடநூல்கள், புதிய சீருடைகள், புதிய கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது பரவி வருவது வீரியமற்ற கொரோனா வைரஸ் என்பதால் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தேவை இல்லை. இருப்பினும் அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது பரவுவது வீரியமற்ற கொரோனா: கட்டுப்பாடுகள் தேவை இல்லை: அமைச்சர் பேட்டி
0