சென்னை: ஞாயிற்றுக்கிழமை நடந்து வரும் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் கோவை தனியார் மருத்துவமனைக்கும் இடையே பாத மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சனிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றால் அதற்கு அடுத்த நாள் மருத்துவர்களுக்கு விடுமுறை வழங்க அவசியம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் நடந்தால் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ முகாம் சனிக்கிழமை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி சனிக்கிழமை மருத்துவ முகாம் நடத்தப்படும்.