சென்னை: பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் எந்த ஆக்கிரமிப்போ, கடைகளோ வைக்க கூடாது. உத்தரவை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.