Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: த.வெ.க.வுக்கு அதிமுக ஆதரவு என வெளியாகும் செய்தி தவறான தகவல் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சதுரங்கம் சூடுபிடித்துள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்காகத் தனது கூட்டணி வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளது.

5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தொடர்ந்து தவெக தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.-விடம் ஆதரவு கேட்டுள்ளது. இதனிடையே அதிமுக எம்எல்ஏக்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இபிஎஸ் உள்பட வெற்றி பெற்ற 47 எம்எல்ஏக்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி.முனுசாமி; த.வெ.க.வுக்கு அதிமுக ஆதரவு என வெளியாகும் செய்தி தவறான தகவல். தவெகவுக்கு ஆதரவு தருவது பற்றி பேசவில்லை. தவெகவுக்கு எந்த நிலையிலும் அதிமுக ஆதரவு அளிக்காது என்று கூறினார்.