சென்னை: கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ், நேற்று மாலை, பெங்களூருவில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில், சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், சென்னை வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்தேன். காவிரி விவகாரத்தில், எந்த பிரச்னையும் இல்லை. இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் தர வேண்டும் என்பதை கண்காணிக்க, காவிரி நதிநீர் ஆணையம் உள்ளது. அதற்கும் மேல் சுப்ரீம் கோர்ட்டும் உள்ளது. இதனால் காவிரி தண்ணீர் விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு கூறினார்.