கடலூர்: கடலூரில் கடல் சீற்றம் காரணமாக 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. விசாகப்பட்டினத்துக்கு 470 கி.மீ. தென்கிழக்கில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. கடலூரில் உள்ள தாழங்குடா பகுதியில் வழக்கத்தைவிட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.