*நகர உதவி செயற் பொறியாளர் அறிவுறுத்தல்
மன்னார்குடி : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவாரூர் மின் பகிர் மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின் வாரிய பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, நகர உதவி செயற் பொறியாளர் முனைவர் சம்பத் பேசுகையில், மின் ஊழியர்கள் பாதுகாப்பு விதி களை பின் பற்றியும் ,பாதுகாப்பு சாதனங் களை முறையாக பயன்படுத்தியும் பாதுகாப்பாக விபத்து ஏற்படாமல் பணி செய்ய வேண்டும்.
காற்று மற்றும் மழையின் போது மின் தடை ஏற்பட்டால் பாதுகாப்புடன் விரைந்து மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் ,சீரான மின் விநியோ கத்தை பிரிவுப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்,மேம்பாட்டு பணி களுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டால் அந்த பகுதி நுகர்வோருக்கு முன் கூட்டியே குறுந்தகவல் கொடுக்க வேண்டும்.பொதுமக்கள் காற்று மற்றும் மழை நேரத்தில் பொதுமக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடக்கூடாது. பள்ளி செல்லும் குழந்தகள் மற்றும் எவரையும் தொட அனுமதிக்கக் கூடாது.கம்பிகள் அறுந்து கிடந்த தால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு உடன் தகவல் தர வேண்டும்.
மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.மேலும் குழந்தை களை அந்த இடங்களில் விளையாடவிடக்கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அரு கில் பட்டம் விடக் கூடாது. மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.
மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. வீடுகளில் மின் கசிவின்றி வய ரிங்கை பராமரிக்க வேண்டும். வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இ.எல்.சி. பி. சாதனம் பொ ருத்தப்பட வேண்டும்.
வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனேயே உலர் ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். மெயின் சுவிட்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது பார்க்க கூடாது. இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலை யங்கள் போன்ற இடங் களில் தஞ்சம் அடைய கூடாது. மின் பாதைக்கு கீழே போர்வெல் போடக்கூடாது.மேலும், லாரி, டிப்பர், ஜேசிபி, கிரேன் ஆகியவற்றை பயன் படுத்தக்கூடாது.
இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் மாலைகளை மின் பாதைகளில் வீசக்கூடாது. மின் வாரிய கம்பங்களில் கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் கட்டக்கூடாது. பொது மக்கள் எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வோடு இருந்து மின் விபத் துக்களை தவிர்க்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், பிரிவுப் பொறியாளர்கள் ராஜகோபால், சீனிவாச கார்த்திகேயன், பாலசுப்ரமணியன் மற்றும் மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நகர பிரிவு பொறியாளர் கண்ணன் நன்றி கூறினார்.