சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்பான விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என என்.எல்.சி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் அளிக்கவில்லை, ஐகோர்ட் உத்தரவையும் நிர்வாகம் பின்பற்றவில்லை என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.