சென்னை: என்எல்சி நிர்வாகம் – ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவை அணுக வேண்டும். அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண உயர்மட்டக்குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து என்.எல்.சி. மேல்முறையீடு செய்தது. அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.