கடலூர்: என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து போலீஸ் வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் வாகனங்கள் கண்ணாடி உடைக்கபட்டது. இதில் 6 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களை எச்சரிக்க, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலிசார் எச்சரிக்கை விடுத்தனர்.