சென்னை: பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: பாராலிம்பிக்ஸ் 2024ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்எச்6 (SH6) போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது இந்த சிறந்த சாதனை; மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் நீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.