சென்னை: திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மட மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்த விவகாரத்தில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தாவை ஏற்கனவே இருந்த மடாதிபதி ஆத்மானந்தா நியமித்திருந்தார். நித்யானந்தா நியமன நடவடிக்கையை எதிர்த்து நாகை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தா எங்கு உள்ளார்? நேரிலோ, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமோ ஆஜராகலாமே என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.