Friday, February 23, 2024
Home » நிர்மலா சீதாராமன் மூலம் கோயபல்ஸ் பிரசாரத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது: தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம்

நிர்மலா சீதாராமன் மூலம் கோயபல்ஸ் பிரசாரத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது: தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம்

by Suresh

சென்னை: மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டாமல் நிர்மலா சீதாராமன் மூலம் கோயபல்ஸ் பிரசாரத்தை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 12ம் தேதியே தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததாக பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் நிர்மலா சீதாராமன். வானிலை மையம் எச்சரித்தது என்றால், 12ம் தேதி வைகுண்டத்திலிருந்து ரயிலை இயக்கியது ஏன்?. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள நிவாரணமாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதை பார்த்தால், முதல்வர் கேட்ட தொகையில் 4% தொகைகூட கிடைக்காது என்றே தெரிகிறது. தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்திருப்பதையே நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பு வெளிப்படுத்துகிறது. வரலாறு காணாத சென்னை மழை வெள்ளத்திலிருந்து மக்களை விரைந்து மீட்டெடுத்தது போல், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்ப அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டிருக்கிறார் முதல்வர். நேரில் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கிறார். அவரை அந்த மாவட்ட மக்களே மனதார பாராட்டி கொண்டிருக்கிறார்கள். இதை பொறுத்து கொள்ள முடியாத ஒன்றிய அரசு, நிர்மலா சீதாராமன் மூலம் கோயபல்ஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பாஜவின் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

nine + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi