நீலகிரி: கூடலூர் சோலாடி பகுதியில் 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் தோட்டத்தில் பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளர்கள் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தோல், பற்கள், நகங்களுக்காக புலியைக் கொன்ற சூரியநாத் பராக், அமன் கோயாலா, சுரேஷ் நண்வாரிடம் விசாரணை நடைபெறுகிறது.