நீலகிரி: நீலகிரிக்கு மே 25, 26ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 400 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழை பாதிப்புகளை கண்டறிய 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும் 80 பேர் கொண்ட மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாகவும், உதவி தேவைப்பட்டால் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரிக்கு மே 25, 26ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
0