சென்னை: நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஜூலை 28வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.