நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து மர்மநபர்களால் கடத்தபட்டது. கடத்தப்பட்ட பேருந்து 3 கி.மீ தொலைவில் சிக்கியது. கரியசோலை மலை கிராமத்தில் இரவில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநரும் நடத்துனரும் ஓய்வெடுக்க சென்ற நிலையில் கடத்தியுள்ளனர். இன்று காலை பேருந்தை தேடியபோது மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது. பேருந்து அருகில், பைக் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இரவில் பேருந்தை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.