உதகையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!
நீலகிரி : உதகையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உதகையில் கடந்த மாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர். ரூ.143.69 கோடி மதிப்பில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக பழங்குடியினருக்கு அதிநவீன வசதிகளுடன் உதகையில் மருத்துவமனை திறக்கப்பட்டது.



