நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் காவல் நிலையம் பின்புறமுள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு நடராஜபுரம் மெயின் தெருவில் பொதுகழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்தக் கழிப்பறையில் உள்ள குழாய்கள் பழுது ஏற்பட்ட நிலையில், அவை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் இந்தக் கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் போனது. இந்தக் கழிப்பறையின் மேற்பகுதியில் செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் தற்போது அந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்த நிலையில், அந்த இடம் கொப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழுதடைந்த பொதுக்கழிப்றை, தண்ணீர் தொட்டி மற்றும் குழாய்களை மீண்டும் சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் கழிப்பறையை சுற்றி உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.