நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தனியார் பள்ளியில் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவிகள் கடந்த 31ம் தேதி தங்களது சக மாணவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது மது அருந்தியுள்ளனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வரவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அதில் நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.